2024 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரயில் இடம்பெற்றது
இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கான மாலுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறி 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் மாநாட்டு மண்டபத்தில் 2024 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.
கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கொமடோர் துமிது அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்குநிலை பாடநெறி 2024 ‘Basic technological trends in electronics, computer programming, embedded systems, printed circuit development, mobile application development’ ஆகிய தலைப்புகளில் உள்ளடக்கப்பட்டது. மேலும், இலங்கையில் உள்ள இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்களின் வரலாறு மற்றும் கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் எதிர்கால சவால்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் மாலுமிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இப்பயிற்சி திட்டத்தில் மின்சாரம், பொறியியல், சிவில் பொறியியல் மற்றும் கடல்சார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் குழுவொன்றும் பங்குபற்றியதுடன், சான்றிதழ்களை வழங்குவதற்காக கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கப்டன் ஹேமந்த ரணசிங்க மற்றும் பதில் பணிப்பாளர் (கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி), கமாண்டர் (பொறியாளர்) புத்திக ரந்திமால் உட்பட கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.