கொமடோர் ஹர்ஷ டி சில்வா தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றார்
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கொமடோர் ஹர்ஷ டி சில்வா இன்று (2024 ஒக்டோபர் 30) தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், அவர் குறித்த கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
கடற்படை மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு கொமடோர் ஹர்ஷ டி சில்வாவை வரவேற்ற பின்னர், கடற்படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க, கட்டளைத் தலைமையகத்தில் புதிய பதில் கட்டளைத் தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.
மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க கடற்படை மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளையிடம் இருந்து பிரியாவிடை பெற்றார்.