வட மத்திய கடற்படை கட்டளையின் மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டது

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்களான கஜபா மற்றும் புஸ்ஸதேவ ஆகிய நிறுவனங்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான விடுதிகள் வட மத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார தலைமையில் 2024 ஒக்டோபர் மாதம் 18 மற்றும் 19 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில், வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், கட்டளை சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிப்புக்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தின், நாராபாடு கடற்படை இணைப்பு மற்றும் வன்கலைபாடு இலக்கம் III கரையோர கண்காணிப்பு நிலையங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளநிலை கடற்படை மாலுமிகளின் விடுதிகள் மற்றும் இலங்கை கடற்படை புஸ்ஸதேவ நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் கடற்படை விடுதிகள் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.