வடக்கு கடற்படை கட்டளையின் மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில்,வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், பள்ளிகுடா கரையோர கண்காணிப்பு மையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளநிலை கடற்படை மாலுமிகளுக்கான விடுதிகள் வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவின் தலைமையில் 2024 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்திற்குச் சொந்தமான பள்ளிகுடா கரையோர கண்காணிப்பு மையத்தினுல் இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் வடக்கு கடற்படை கட்டளை சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் 2024 மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், இவ்வாறு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவிற்கு வடக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய குழுவும் கலந்துக் கொண்டது.