கடற்படைத் தளபதி கெளரவ பிரதமர் அவர்களின் முதல் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக விஜயம் செய்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் (2024 ஒக்டோபர் 24) இன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரதமர் திருமதி. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக பிரதமரின் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், தேசிய கடமைகளில் அதிகபட்சமாக இலங்கை கடற்படையின் பங்களிப்பு உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பாக கடற்படைத் தளபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.