தொண்டர் கடற்படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கடற்படை அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

வெலிசறை, இலங்கை தொண்டர் கடற்படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை அருங்காட்சியகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில், தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண மற்றும் தாய்நாட்டிற்காக வீரமரணம் அடைந்த கமாண்டர் (தொண்டர்) செட்ரிக் மார்டின்ஸ்டயின் போர் வீரரின் மனைவி, திருமதி. தில்ருக்ஷி மார்ட்டின்ஸ்டயினின் பங்கேற்புடன் நடைபெற்றது.

1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தொண்டர் கடற்படை பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக கடற்படையின் தொடக்கத்தைக் குறித்தது. மேலும் 1950 டிசம்பர் 09 ஆம் திகதி ராயல் இலங்கை கடற்படையாக நாட்டின் நிரந்தர கடற்படை நிறுவப்பட்ட பின்னர், அரச இலங்கை தொண்டர் கடற்படை1952 ஜனவரி 09 இல் நிறுவப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்த தொண்டர் கடற்படை, 1972 இல் இலங்கை தொண்டர் கடற்படையாக மாற்றப்பட்டது.

இவ்வாறு, இலங்கை தொண்டர் கடற்படையின் ஆரம்பம் முதல் இன்று வரை அதன் முக்கிய தருணங்கள் மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண அவர்களின் மேற்பார்வையின் கீழ், இந்த கடற்படை அருங்காட்சியகத்தின் நிர்மாணப்பணிகள் 2024 ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க தன்னார்வ கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் பெயர்களை உள்ளடக்கி, இந்த நவீன அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் கொத்து வைத்து, போர் வீரன் கமாண்டர் செட்ரிக் மார்டின்ஸ்டயின் உள்ளிட்ட போர் வீரர்களுக்கு திருமதி. தில்ருக்ஷி மார்ட்டின்ஸ்டயின் அவர்களினால் அஞ்சலி செலுத்திய பின்னர், அபிநவ கடற்படை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இலங்கை தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி, கொமடோர் (தொண்டர்) சுசந்த தர்மசிறி, இலங்கை தொண்டர் கடற்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி, கப்டன் டி.ஏ.குணவர்தன (ஓய்வு) மற்றும் தொண்டர் கடற்படை தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டது.