தேசிய பாதுகாப்புப் பாடநெறியின் அதிகாரிகளுக்காக கடற்படைத் தளபதியினால் இரவு விருந்து வழங்கப்பட்டது
இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு பாடநெறியை பயிலும் அதிகாரிகளுக்கு பாரம்பரியமாக கடற்படை தளபதியினால் வழங்கப்படும் இரவு விருந்து, குறித்த நிறுவனத்தின் மூன்றாவது (03) பாடநெறியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கும் நிகழ்வு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரியின் இல்லத்தில் நடைபெற்றது. உலகின் தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் நடத்தப்படும் இராணுவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக (Military tradition) இலங்கையில் தேசிய பாதுகாப்பு பாடநெறியில் கல்வி கற்கும் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு கடற்படை தளபதியினால் இவ்வாரு இரவு விருந்து வழங்கப்பட்டன. அதன்படி, இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா மற்றும் அவருடைய மனைவி உட்பட பாடநெறியைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், நிறுவனத்தின் கல்விப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளை கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவினால் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி இல்லத்திற்கு மிகவும் அன்பாக வரவேற்கப்பட்ட பின்னர், பாரம்பரியமாக வழங்கப்படும் இரவு விருந்து வழங்கப்பட்டது.
மேலும், கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா உட்பட கடற்படை சேவா வனிதா செயற்குழு உறுப்பினர்கள், கடற்படை தலைமைப் பணியாளர் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.