வடக்கு கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகள் விரிவாக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான உத்தர நிறுவனத்தின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 2024 ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி புனரமைக்கப்பட்ட பூப்பந்து விளையாட்டரங்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பிரதான சமையலறை வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காகவும், இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தின் கடற்படை வீரர்களின் நலனை மேம்படுத்துவதற்காகவும் இந்த கட்டிடம் 2024 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளை சிவில் பொறியியல் துறை மற்றும் கேப்டன் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் தொழில்நுட்ப உதவியுடன், இந்த கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.