வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக இலங்கையின் முன்னால் படைவீரர் சங்கத்தினால் கடற்படைத் தளபதிக்கு கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக நடைபெற்ற பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வை இலங்கையின் முன்னால் படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன்ட் கர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) அவர்களினால் (2024 அக்டோபர் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு, கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போதும், கடந்த முப்பது வருடங்களிலும் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீர வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த பொப்பி மலர் நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, போரின் போது உயிர் தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களையும் நினைவு கூர்ந்து, இலங்கையின் முன்னால் படைவீரர் சங்கத்தின் தலைவரினால் கடற்படைத் தளபதிக்கு கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு இடமபெற்றது.

மேலும், இந்நிகழ்வில் இலங்கையின் முன்னால் படைவீரர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.