தொற்றாத நோய்களைத் தடுப்பதற்காக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு சுகாதார கல்வி திட்டம் கடற்படைத் தலைமையகத்தில்
கடற்படை வீரர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக கலாநிதி ரியர் அட்மிரல் கோதாபய ரணசிங்க அவர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட விரிவுரை 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் பங்கேற்புடன் இந்த விசேட நேர சுகாதார கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தொற்றாத நோய்களுக்கு ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கடற்படையினரின் உள்ளக இணையத்தளத்தின் (https://webcast.navy.lk) ஊடாக இந்த விசேட விரிவுரையை அனைத்து கடற்படை வீரர்களும் பார்வையிடும் வகையில் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.