அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியின் அதிகாரிகள் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுப் பாடநெறியைச் (Defence and strategic studies course - Australian) சேர்ந்த மாணவ அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழிய உறுப்பினர்கள், Colonel Lara Terese Troy தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 ஒக்டோபர் 22) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படைத் தலைமையகத்திற்கு வந்த அதிகாரிகளை வரவேற்றார்.
இதன்படி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியின் தலைவர் Colonel Lara Terese Troy மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றதன் பின்னர், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், இலங்கை கடற்படையின் பங்கு குறித்து, கடற்படைத் தளபதி அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு நெறியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிவித்தார்.