கடற்படையினால் மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவில் மருத்துவ தர மறுசீரமைப்பு இயந்திரம் நிறுவப்பட்டது
இலங்கை கடற்படையின் சமூக பணி திட்டத்தின் கீழ், 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ தர மறுசீரமைப்பு இயந்திரம் ஒன்று (01) கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. இந்திராணி மல்வென்ன மற்றும் செயற்திட்ட (கடற்படை சமூக பணி) முகாமையாளரினால் மக்களின் உரிமைக்காக வழங்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட முப்பதாவது (30) மருத்துவத் தர மறுசீரமைப்பு இயந்திரத்தினால் (01) ஒரே நேரத்தில் பதினைந்து (15) சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தம் மாற்றும் திறன் கொண்டது.
மேலும், இந்நிகழ்விற்கு மினுவங்கொட ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.டி.ஜி.விமலசேன” இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தில் மூத்த மற்றும் இளைய மாலுமிகள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் குழுவொன்றும் இதில் கலந்து கொண்டது.