இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 21) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி படகுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.
இந்த விரைவுத் தாக்குதல் படகின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் Jonathan Sunil S Kothari மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவிற்கு இடையில் மேற்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 21 ஆம் திகதி உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றதுடன், உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
மேலும், விரைவுத் தாக்குதல் படகு, இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அதன் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் சென்றதுடன், குறித்த விரைவுத் தாக்குதல் படகின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.