இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” விரைவுத் தாக்குதல் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவு தாக்குதல் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Car Nicobar class வகையின் “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் கப்பல் நாற்பத்தி ஒன்பது (49) மீட்டர் நீளமும் எழுபது (70) கடற்படையினரையும் கொண்டுள்ளதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக Lieutenant Commander Jonathan Sunil S Kothari இருந்தார்.

மேலும், “Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் முழு கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்லவதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 2024 ஒக்டோபர் 28 ஆம் திகதி குறித்த கப்பல் தீவை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.