இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் (Higher Defence Management Course India) மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட Colonel Kedar D Gupte தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 அக்டோபர் 15) கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்தனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்த குழுவினரை கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.
இதன்படி, இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் பிரதானி Colonel Kedar D Gupte மற்றும் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் பின்னர், இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றமும் இடம்பெற்றது.
மேலும், இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடற்படையின் துனை தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸினால் இலங்கை கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.