இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில்

ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024) இன்று (2024 அக்டோபர் 15) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஆரம்பமானது.

2024 அக்டோபர் 15 மற்றும் 16, ஆகிய திகதிகளில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில், இந்து-பசிபிக் கடற்படைகள் உட்பட இந்து-பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் சட்ட அமலாக்க முகமைகள், வழக்கறிஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கின்ற இந்த இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டத்தின் இணைத்தலைமை இந்து-பசிபிக் பிராந்திய தகவல் பகிர்வு வழிகாட்டல் குழு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் CRIMARIO II நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படுகின்ற இந்த இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டத்தில் மீன்வளத்தின் நிலைத்தன்மையை ஆதரிப்பதில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தும் தகவல் பரிமாற்றம், கடலில் நடைபெறுகின்ற அவசரநிலை மற்றும் சம்பவங்களை நிர்வகித்தல், கடல்சார் கண்காணிப்புக்கான நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கான பாதுகாப்பான கடல் பகுதியை பராமரிப்பது குறித்து பங்குதாரர்களிடையே முழுமையான அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையின் இணைத் தலைவர் மற்றும் இணைப்பு, இந்து-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பாடு அதைச் செய்வதற்கு ஒரு முக்கியமான வாய்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.