கடற்படையின் பங்களிப்புடன் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் கடற்கரைகள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது

காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கடற்கரைகளை மையமாக வைத்து இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று இன்று (2024 அக்டோபர் 12) நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின, காவந்திஸ்ஸ மற்றும் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளின் கடற்படையினர் காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கடற்கரையில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் கடற்கரையில் இருந்து அகற்றினர்.

தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின, காவந்திஸ்ஸ மற்றும் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் படகுகளின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட மாலுமிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும், கடற்கரையை சுத்தம் செய்வதோடு கரையோர அரிப்பை தடுக்கும் நோக்குடன், இலங்கை கடற்படை கப்பல் காவந்திஸ்ஸ நிருவனத்தின் கடற்படையினரால் ஐந்து (05) மூதில்லா மரக்கன்றுகளையும் நடப்பட்டன.