பிரெஞ்சு கடற்படை ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் இலங்கையின் பிரெஞ்சு கடற்படை ஆலோசகராக பணியாற்றும் கமாண்டர் Dang Khoa BUI, இன்று (2024 அக்டோபர் 11,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் பிரான்ஸ் கடற்படை ஆலோசகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இணக்கமான கலந்துரையாடல் நடத்தியதன் பின்னர், கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னமொன்று வழங்கினார்.
மேலும், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் கடல்சார் பாதுகாப்பு ஆலோசகரான Jean-Baptiste TROUCHE அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.