நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் அகில இலங்கை வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடர்
போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை வலுவூட்டல் என்ற உன்னதமான கருப்பொருளை மனதில் கொண்டு, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்காக வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரொன்று 2024 நவம்பர் மாத்த்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான வடிவமைப்புகள் 2024 அக்டோபர் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதன்படி, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், இந்த போட்டித்தொடர் குறித்த படையணியின் தலைமையில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தேசிய அபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு சபை, கொழும்பு அமைப்பு மற்றும் Dialog Axiata பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கிறது.
இந்தப் போட்டித்தொடரில் சித்திரப் போட்டி, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பிரிவாகவும், நேரடி காணொளிப் போட்டி 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை முதல் பிரிவாகவும், 19 முதல் 30 வயது வரை என இரு பிரிவுகளாக நடைபெறும். சித்திரப் மற்றும் நேரடி காணொளிப் போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசுகள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும், அதே நேரத்தில் நேரடி காணொளிப் போட்டியின் இரண்டாவது பிரிவில் 19 முதல் 30 வயது வரையிலான வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க கையடக்க தொலைபேசிகள் வழங்கப்படும்.
நேரடி காணொளிப் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகள் பெறும் பரிசுத் தொகையில் ஐம்பது சதவீதம் (50%) வெற்றியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் என்பதால், இந்தப் போட்டியில் பாடசாலை மாணவர்களை பங்கேற்க ஊக்குவிப்பது போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்திற்கு இளைஞர்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் பாடசாலைகளுக்கு அங்கீகாரம் மற்றும் நிதி நன்மைகளையும் கொண்டு வரும்.
மேலும், போட்டி விதிகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை nddcb.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம். போட்டித்தொடருக்காக வடிவமைப்புகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 31 அக்டோபர் 2024 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(இலங்கை கடற்படையில் சேவையில் இருக்கும் கடற்படை வீரர்களுக்கு இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க முடியாது. இது தொடர்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களுக்கு தெரிவிக்கவும்)