கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” தொடங்கியது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 05 ஆம் திகதி திருகோணமலை தெற்கு சாம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவன வளாகத்தில் ஆரம்பமானதுடன் 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் இந்தப் பயிற்சியை நடத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் களப் பயிற்சிக்காக முதன்முறையாக, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் வங்காளதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்காணிப்பாளர்கள் உட்பட இருபத்தைந்து (25) கடற்படையினர்கள் பங்குபற்றவுள்ளனர், அதேவேளை இலங்கை கடற்படையின் சார்பில் கடற்படை ஏவுதல் கட்டளை, மரைன் காலாட்படை பிரிவு, மரைன் படையணி, விரைவு நடவடிக்கைப் படகுப் படை, புலனாய்வுப் பணிப் படை, மற்றும் இலங்கை கடற்படையின் மருத்துவப் பிரிவு ஆகியவற்றில் இருந்து மொத்தம் 195 கடற்படை வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். மேலும், இலங்கை கடற்படை கப்பல் சக்தி தரையிறங்கும் கப்பல், கரையோர ரோந்து கப்பல்கள் மற்றும் RHIB கப்பல்கள் உட்பட இலங்கை விமானப்படையின் பெல் 212 மற்றும் MI 17 ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் இணையும்.

இந்தப் பயிற்சின் போது துருப்புக்கள் மற்றும் போர்ப் பொருட்களைக் கடலில் இருந்து எதிரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைக்கும் நீர்நிலை நடவடிக்கைகள் (Amphibious Operations), எதிரிகளின் எல்லை மற்றும் எதிரிகளின் திறன்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் உளவுப் பயிற்சிகள் (Reconnaissance), தீவுகளைக் கொண்ட கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் (Riverine/ Search and Clear Operations), எதிரியின் எல்லைக்குள் நட்பு படைகளை பாதுகாப்பாக நுழைக்க நிலம் மற்றும் வான்வழி தாக்குதல் பயிற்சிகள் (Amphibious Assault), கடலில் இருந்து படையினர்களை பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக கடலில் இருந்து அடையாளம் காணப்பட்ட எதிரி இலக்குகளைத் தாக்கும் பயிற்சிகள் (Naval Gun Fire Support - NGFS), யுத்தத்தின் போது கூடுதல் படையினர்களை அனுப்புதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் வெளியேற்றுவதற்கான பயிற்சிகள் (Reinforcement and CASEVAC), வானில் இருந்து போர்க்களத்துக்கு படையினர்கள் அனுப்பும் பயிற்சி (Air Infiltration by Rappelling), உள் பாதுகாப்பு கடமைகள் (Internal Security Duties - ISD) மற்றும் எதிர்ப்புரட்சிப் போர்கள் (Counter Revolutionary Warfare - CRW) எதிரிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க தொடர்புடைய போர் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்(Stability Operations) உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நீர்நிலை பயிற்சிகளின் கட்டளை அதிகாரியாக (Commander Amphibious Task Force - CATF) இலங்கை கடற்படை கப்பல் சக்தியின் கட்டளை அதிகாரி கேப்டன் துஷார மகேஷ் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.

இந்த Blue Whale - 2024 பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம்; நீர்நிலை நடவடிக்கைகளின் மூலோபாய உத்திகள் தொடர்பான அறிவைப் புதுப்பித்தல், கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் பிராந்திய பங்குதாரர்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் கூட்டாண்மையை மேம்படுத்துதல், பங்குதாரர்களின் போர் அனுபவத்தைப் பகிர்தல், புதிய அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகள், பங்குதாரர்களின் திறன்களை அடையாளம் காணுதல் மற்றும் கடற்படை சிறப்புப் படைகள் மற்றும் மேம்படுத்துதல் பிரிவுகளின் திறன்கள், கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கடற்படை கூட்டாகப் பதிலளிப்பதற்கும், உள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவையான தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை வளர்ப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தப் பயிற்சியின் ஆரம்ப நிகழ்வுக்காக கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை கொமடோர் சஞ்சீவ பெரேரா, பணிப்பாளர் மரைன் கொமடோர் ரொஹான் திஸாநாயக்க, கடற்படைப் பொறுப்பதிகாரி (திருகோணமலை தெற்கு) மற்றும் தளபதி இலங்கை கடற்படை கப்பல் விதுர கப்டன் சஞ்சீவ கொடிகார, 4ஆவது விரைவுத் தாக்குதல் குழுவின் கட்டளை அதிகாரி கப்டன் அதுல ஜயவீர, கட்டளை அதிகாரி இலங்கை கடற்படை கப்பல் விதுர மற்றும் முதலாம் மரைன் படையணி கமாண்டர் சமந்த திசாநாயக்க, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு கடற்படை வீரர்கள் உட்பட இலங்கை கடற்படையினர் பயிற்சியில் பங்குபற்றியிருந்தனர்.