கடற்படையின் பங்களிப்புடன் புஸ்ஸ மற்றும் மெதில்ல கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

புஸ்ஸ மற்றும் மெதில்ல பகுதிகளில் கடற்கரைகளை மையமாக் கொண்டு இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியொன்று இன்று (05 அக்டோபர் 2024) செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படையின் நிபுண மற்றும் ருஹுண நிறுவனங்களின் முயற்சியின் கீழ், இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகள், கிங்தோட்டையிலிருந்து புஸ்ஸ சந்தி வரையிலும், கிரம மோயாவிலிருந்து மெதில்ல கடற்கரை வரையிலும் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த கடற்கரைகளில் சிதறி கிடந்த பிளாஸ்டிக், பாலிதீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் அகற்றப்பட்டன.

இலங்கை கடற்படை கப்பல் நிபுண மற்றும் ருஹுண நிறுவனங்களைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவொன்று குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.