ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் 154 கூட்டு பணிக்குழுவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பஹ்ரைனில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாகக் கருதப்படும், ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் (Combined Maritime Force - CMF) கீழ் செயல்படும் 154 வது கூட்டுப் பணிக்குழுவின் தற்போதைய கட்டளை அதிகாரியான கொமடோர் Haytham Elsayed Khalil உட்பட குழுவினர். இன்று (அக்டோபர் 02, 2024) அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 154 ஆவது கூட்டுப் பணிக்குழுவின் கட்டளையை இலங்கை கடற்படை பொறுப்பேற்க உள்ளது.

இதன்படி, கடற்படைத் தளபதியினால் கொமடோர் Haytham Elsayed Khalil அவர்களை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படை எதிர்காலத்தில் கட்டளையை பொறுப்பேற்க உள்ள ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் (Combined Maritime Force - CMF) கீழ் செயல்படும் 154 வது கூட்டுப் பணிக்குழுவின் பங்கு உட்பட இருதரப்பு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

46 நாடுகளின் கடற்படை மற்றும் கடல்சார் பங்குதாரர்களுடன் பஹ்ரைன் இராச்சியத்தை தலைமையிடமாகக் கொண்டு பிராந்திய ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலில் கடற்கொள்ளைகளை தடுக்க செயல்படும் உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாக கருதப்படும் இந்த கூட்டணியின் 39வது உறுப்பினராக இலங்கை 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் கைகோர்த்தது. அதன்படி, உலகின் முக்கியமான கடல் பாதைகளின் வழக்கமான பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பான கடல்சார் சூழலை உருவாக்குவதற்கான கூட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை பங்கேற்கிறது.

இந்த கூட்டு கடல்சார் படையணி, ஐந்து (05) ஒருங்கிணைந்த பணிப் படையணிகளின் கீழ் (Combined Task Force) பல்வேறு கடல் பிராந்தியங்களில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, ஒருங்கிணைந்த பணிக்குழு படையணி 150 (Combined Task Force 150 – CTF - 150) மூலம் இந்தியப் பெருங்கடலில் மற்றும் Gulf of Oman என்ற கடல் பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதுடன் குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் ஒருங்கிணைந்த பணிக்குழு 151 (CTF - 151) மற்றும் ஓமன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை நடத்துகிறது. ஒருங்கிணைந்த பணிக்குழு படையணி 152 (CTF - 152) மூலம் Arabian Gulf கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடத்துகிறது, ஒருங்கிணைந்த பணிக்குழு படையணி 153 (CTF - 153) செங்கடல் மற்றும் Gulf of Aden கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடத்துகிறது, மேலும் ஒருங்கிணைந்த பணிக்குழு படையணி 154 (CTF - 154) கடல்சார் பாதுகாப்பு பயிற்சிகள்.நடத்துகிறது.

உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாகக் கருதப்படும் ஒருங்கிணைந்த கடல்சார் படையணியுடன் இணைந்து அங்கு 154 வது கூட்டுப் பணிக்குழுவுக்கு கட்டளையிடும் வாய்ப்பு இலங்கை கடற்படைக்கு கிடைப்பது எழுபத்து நான்கு (74) இலங்கை கடற்படையின் பெருமைமிக்க நீண்ட பயணத்தில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கடல்சார் விழிப்புணர்வு (Maritime awareness), கடல்சார் சட்டம் (Maritime law), கடல்சார் தடைகள்(Maritime Interdiction) , கடல்சார் மீட்பு மற்றும் உதவி (Maritime rescue and assistance) மற்றும் தலைமைத்துவ மேம்பாடு (Leadership development) ஆகியவற்றின் மூலம் கடல் பாதுகாப்பை மேம்படுத்த இந்த முயற்சி முயல்கிறது. இது இந்தியப் பெருங்கடலில் உள்ள உள்நாட்டு கடல்கள் முதல் சர்வதேச கடல்கள் வரை பரந்த கடல் பிராந்தியத்தில் இயங்கும் திறன் வாய்ந்த கடற்படை என்ற இலங்கை கடற்படையின் சர்வதேச அங்கீகாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இது உலக அரங்கில் நாட்டின் நற்பெயரை கணிசமாக உயர்த்தும்.

மேலும், இலங்கை கடற்படை எதிர்காலத்தில் கட்டளையை பொறுப்பேற்க உள்ள 154 வது கூட்டுப் பணிக்குழுவின் பங்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, இந்த கூட்டுப் பணிக்குழுவின் தற்போதைய கட்டளை அதிகாரி, கொமடோர் Haytham Elsayed Khalil, துணைக் கட்டளை அதிகாரி, கொமான்டர் William Franklin Campbell மற்றும் அதன் கடல்சார் பாதுகாப்பு ஊக்குவிப்பு பயிற்சி மற்றும் திட்டமிடல் அதிகாரி, லெப்டினன்ட் Mohamed Abdelrahman Mohamed Eldaltouny உடன் கடற்படைத் தலைமையகத்தில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந் நிகழ்வுக்காக பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், பணிப்பாளர் நாயகம் பயிற்சி புத்திக லியனகமகே உடபட கடற்படைத் தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.