255 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 271 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 255 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று பதினொரு (211) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் அறுபது (60) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் இருநூற்று எழுபத்தி ஒரு (271) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி பூணாவ இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி கேப்டன் ரங்க டி சொய்சாவின் அழைப்பின் பேரில் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் அவரினால் வழங்கப்பட்டன.

அதன்படி, 255 வது ஆட்சேர்ப்பின் சிறந்த கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் ஜி.வி.டி.எச். விஜேரத்ன பெற்றுள்ளதுடன் அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் பி.எச்.எம்.டீ.என் விஜேரத்ன பெற்றுள்ளார். சிறந்த விளையாட்டு வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை கடற்படை வீரர் டீ.எஸ்.பீ த சில்வா மற்றும் சிறந்த வீராங்கனைக்கான வெற்றிக்கிண்ணத்தை கடற்படை வீரர் கே.வீ.என் மதுஹன்சனிவும் பெற்றுக்கொண்டனர். சிறந்த துப்பக்கியாளருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் யூ.டப்.ஜீ.பீ.ஏ சந்திரரத்ன பெற்றுள்ளார். இதேவேளை, 255 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’துடுகெமுனு” பிரிவு தெரிவு செய்யப்பட்டது.

இங்கு வெளியேறிச் செள்ளும் கடற்படை வீரர்களை உரையாற்றிய பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் முதலில் புதிய கடற்படை வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற இந்த நாட்டின் யுத்தத்தை முடிவடைந்த நிலையில், ஒரு தொழில்முறை கடற்படையின் சிறப்புத் தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் அதன் சிறப்புக் கடமைகளை நிறைவேற்றவும், பாதுகாப்பிற்காகவும் வெளியேறும் புதிய மாலுமிகளுக்கு கடமைகள் ஒதுக்கப்படும். அத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தல் எழுவதற்கு இடமளிக்காமல், அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மறைமுகமாக பங்களிப்பதோடு, திறமையான மற்றும் ஒழுக்கமான கடலோடியாக தாய்நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்குவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மேலும், ஒரு தீவு நாடான இலங்கையின் தேசிய பாதுகாப்பை நிறுவுவதிலும், ஒரு பெரிய கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், மீன் வளங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் வளங்களையும் பாதுகாத்தல், கடல் போக்குவரத்தை பாதுகாத்தல், மற்றும் இலங்கைக்கு சொந்தமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, கப்பல்கள் மற்றும் ஆபத்தில் உள்ள நபர்களை மீட்பது போன்ற சிக்கலான கடமைகள் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் வெளியேறி செல்லும் பயிற்சி மாலுமிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை செய்ய வேண்டும். தன்னையும், தன் குடும்பத்தையும், கடற்படையினரின் கவுரவத்தையும் பாதுகாக்கும் வகையில் பெருமை கொள்கிறது

கடந்த காலப் போர்வீரர்களின் தியாகத்தால் உருவான அமைதியைப் பாதுகாக்கவும், விரைவான வளர்ச்சியின் மூலம் பிரகாசமான எதிர்கால சகாப்தத்தின் பணியைத் தோளில் சுமக்கவும், உடன்பட்டு தங்கள் மகன்களையும் மகள்களையும் கடற்படைக்கு வழங்கிய அன்பான பெற்றோருக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு. தமது அன்புக்குரிய பிள்ளைகளினால் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் அதனை ஊக்குவிப்பதுடன், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மிகவும் உயர்வான முறையில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பங்களித்த அனைத்து கடற்படை வீரர்களையும், சிரேஷ்ட மற்றும் அனைத்து அதிகாரிகளையும் பாராட்டுவதாக தெரிவித்தார். இதற்காக விசேடமாக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் கட்டளைத் தளபதி உட்பட இளைய ஆலோசகர்களை சிறப்புரையாற்றினார்.

மேலும், கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் இந்த வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.

இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார, வட மத்திய கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் மங்கல மும்முல்லகே உட்பட கடற்படை தலைமையகத்தின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிருவனத்தில் அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.