சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையானது 2024 செப்டெம்பர் 28 ஆம் திகதி காலை கடற்படை கட்டளைகளை உள்ளடக்கி கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் நோக்கத்துடன், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான கடல் சூழலை வழங்கும் நோக்கில், கடலோர சுத்திகரிப்பு திட்டங்களுக்கு கடற்படை தொடர்ந்தும் பங்களித்து வருகின்றது.
மேற்கு கடற்படை கட்டளையின் மூலம் காலி முகத்துவார கரையோரத்தையும், கிழக்கு கடற்படை கட்டளையானது திருகோணமலை கடற்படை கப்பலின் கரையோரத்தையும், வட மத்திய கடற்படை கட்டளையானது பியர்கம மற்றும் முழன்காவில் கரையோரத்தையும், தென்கிழக்கு கடற்படை கட்டளையானது பானம மற்றும் கல்முனை கடற்கரை மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மூலம் மிரிஜ்ஜவில, மஹமோதர, நாரிகம, தங்கல்ல ஆகிய கடற்கரைகளை மையமாக் கொண்டு 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி காலை இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் கடற்படை தலைமையகம் மற்றும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.