இலங்கை அரச கடற்படையின் காலத்தில் திருகோணமலையில் கடமையாற்றிய பிரித்தானிய அரச கடற்படை அதிகாரியின் அஸ்தி திருகோணமலை கடலில் கடற்படை மரியாதையுடன் கலைக்கப்பட்டது
1956/1958 காலப்பகுதியில், உலகின் இரண்டாவது பெரிய கடற்படைத் தளமாகக் கருதப்பட்ட திருகோணமலையில் நிறுவப்பட்ட HMS Highflyer கடற்படைத் தளத்தின் துறைமுக சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றிய, 1999 இல் காலமான லெப்டினன்ட் Norman Schofield மற்றும் அவரது மனைவி Marian Schofield ஆகியோரின் அஸ்தி, அதிகாரியின் இறுதி விருப்பத்தின்படி, திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் Ostenburg முனைக்கு அருகில் உள்ள கடலில் கடற்படைப் பாரம்பரியம் மற்றும் மரியாதையுடன் கலைக்கும் நிகழ்வு குறித்த அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Darren Woods ஆகியோரின் பங்கேற்புடன் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை நடைபெற்றது.
இருபத்தைந்து (25) ஆண்டுகளுக்கு முன்னர் காலமான லெப்டினன்ட் Norman Schofield அதிகாரியின் இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவரது அஸ்தி திருகோணமலை கடலில் கலைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் Darren Woods அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் விடுத்த விசேட கோரிக்கையின் பிரகாரம், மறைந்த லெப்டினன்ட் Norman Schofield மற்றும் அவரது மனைவியின் அஸ்தியை கலைக்கும் நிகழ்வு கடற்படை கப்பல்துறையில் Ostenburg Point பகுதியில் நடைபெற்றது.
லெப்டினன்ட் Norman Schofield அதிகாரி, 1935 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய அரச கடற்படையின் ஒரு சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றினார். மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது 1947 ஜூன் மாத்த்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பிரித்தானிய அரச கடற்படையின் பல்வேறு கப்பல்கள் மற்றும் தளங்களில் பணியாற்றிய பின்னர், அவர் 1956/1958 காலப்பகுதியில் திருகோணமலை HMS Highflyer கடற்படை தளத்தில் துறைமுக சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளம் இலங்கை அரசிடம் கையளிக்கப்படும் வரை இலங்கையில் கடமையாற்றிய அதிகாரியின் இறுதி விருப்பத்திற்கிணங்க, அந்த அதிகாரி மற்றும் அவரது மனைவியின் அஸ்தி திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் Ostenburg முனைக்கு அருகிலுள்ள கடலில் கலைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேரன் வூட்ஸ் மற்றும் மறைந்த அதிகாரியின் உறவினர்கள் இருவர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் சம்பிரதாய நிகழ்வுகள் கடற்படை கப்பல்துறையின் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளால் மேற்கொள்ளப்பட்டது.