இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்
பிரான்சில் கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தில் புதிய கல்வி இயக்குனர் (French Director of studies of the Regional Center for Maritime Studies) லெப்டினன்ட் கமாண்டர் Carine BUZAUD அறிமுகப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் கௌரவ Marie-Noëlle Duris அவர்கள் இன்று (2024 செப்டம்பர் 19) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
இதன்படி, இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் கௌரவ Marie-Noëlle Duris அவர்கள் மற்றும் பிரான்சில் உள்ள கடல்சார் கற்கைகளுக்கான பிராந்திய நிலையத்தின் புதிய கற்கைகள் பணிப்பாளர் லெப்டினன்ட் கமாண்டர் Carine BUZAUD அவர்களை கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உட்பட கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் கடல்சார் பாதுகாப்பு ஆலோசகர் கமாண்டர் Jean-Baptise TROUCHE உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.