வெருகல் ஆறு வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலயத்தில் வருடாந்த மகோட்சவ திருவிழாவை நடத்துவதற்கு கடற்படை உதவியது

திருகோணமலை, வெருகல் ஆறு, வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலயத்தில் 14 நாள் வருடாந்த மகோட்சவ திருவிழாவை 2024 செப்டெம்பர் 18 ஆம் திகதி நிறைவடைந்ததுடன், வெருகல் ஆறு ஆற்றங்கரையோரம் இடம்பெற்ற யாக பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பெருந்தொகையான பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடற்படையினர் உயிர் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டனர்.

வருடாந்தம் வெருகல் ஆறு, வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலய முருகப்பெருமானுக்காக நடைபெறும் இந்த மகோட்சவ திருவிழாவில் இவ்வருடம் பெருமளவான இந்து பக்தர்கள் கலந்துகொண்டதுடன், குறித்த பக்தர்களின் பாதுகாப்பிற்காக வெருகல் ஆறு கங்கையைச் சுற்றி பூஜைகள் மற்றும் சடங்குகளை செய்வதற்காக இவ்வாறு கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் கடற்படையின் விரைவு நடவடிக்கை கப்பல் படையின் உயிர்காக்கும் குழுக்கள் மற்றும் கப்பல்களை நிலைநிறுத்த கடற்படை ஏற்பாடு செய்தது.