பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகடமியின் அதிகாரிகள் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் ஆயுதப்படைகளின் பாடநெறி - 2024 இல் கல்வி பயிலும் இருபத்தொரு (21) மாணவ அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழிய உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் (2024 செப்டம்பர் 18) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன் அங்கு, பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Mohammad Shaheenul Haque மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையில் கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்படி, பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்து சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்ட பின்னர், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இலங்கை கடற்படையின் பங்கு பற்றிய விரிவுரையில் பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன், பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Commodore Mohammad Moniruzzaman ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.