விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த 32 கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டது
கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் இருபத்தி எட்டாவது (28) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் இருபத்தி எட்டு (28) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது.
இந்த ஏழு (07) மாத பயிற்சி பாடநெறியில், சிறிய படகுகள் படையணியின் பணிகள் மற்றும் அவசரகால மற்றும் இயற்கை பேரிடர் சூழ்நிலைகளில் அவர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு சிறப்பு நடைமுறை மற்றும் தத்துவார்த்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கடற்படைப் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் அவர்களினால் பயிற்சிக் காலத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார். இதன்படி, சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த உயிர் காப்பாளர் விருதை லெப்டினன்ட் ஜி.எல்.எஸ்.ஜெயருவன் பெற்றுள்ளார். மேலும், சிறந்த படகு கையாளுபவர் மற்றும் சிறந்த உடல் தகுதி பயிற்சியாளர் ஆகிய விருதுகள் கடற்படை வீரர் ஜே.எம்.பி.ஜி.பி.டி ஜெயசேகரவுக்கு வழங்கப்பட்டது.
பயிற்சியை நிறைவு செய்த கடற்படை வீரர்களை உரையாற்றிய கடற்படை பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், விரைவு நடவடிக்கை கடற்படை படையணி தகுதி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களை முதலில் பாராட்டினார். மேலும் கருத்து தெரிவித்த கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், தற்போது யுத்த நிலைமை இல்லாவிட்டாலும், உடனடி நடவடிக்கைக்காக கடற்படையில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களின் முக்கிய கடமை தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை பாதுகாப்பது, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது, கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவதை தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களை உயிர் காக்கும் வகையில் மீட்க தேவையான மேம்பட்ட நடைமுறை மற்றும் சிறப்பு பயிற்சியுடன் துரித நடவடிக்கைகளுக்கு கடற்படையின் புதிய உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அந்த கடமைகளை சீரழிவின்றி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சின்னம் அணிவிக்கும் நிகழ்வின் போது, 28வது தகுதிப் பாடநெறியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், எதிரி இலக்குகள் மீதான தாக்குதல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை சிறிய படகுகளைப் பயன்படுத்தி, தங்கள் பயிற்சி திறன்களை வெளிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டதுடன், இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தியும் அதற்காக இணைந்து கொண்டது.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபியமான பணி, 2007 இல் நிறுவப்பட்ட விரைவான நடவடிக்கை படகுகள் படையணி "முடிவிலிக்கு அப்பால் இயங்கும் ஒரு வெற்றியை நோக்கி" என்ற கருப்பொருளுடன், இராணுவ போர் தந்திரமாக இருந்த சிறிய படகுகள் என்ற கருத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, எதிரிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது மற்றும் வடகிழக்கு கடல் வழிசெலுத்தல் நடவடிக்கைகளை பராமரிக்க கடற்படைக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியது.
மேலும், மனிதாபியமானப் பணியின் வெற்றிக்கு பங்களித்த இந்த படைப்பிரிவு, இந்நாட்டின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான கடல்சார் சவால்களை முறியடிப்பதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கியதுடன், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் பங்களிக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடர்ந்தும் தயாராக உள்ளது.
மேலும், இந் நிகழ்வுக்காக வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், விரைவு நடவடிக்கை படகுகள் படையின் கட்டளை அதிகாரி கெப்டன் நதூன் ரணவீர உட்பட, இப்பயிற்சியில் பங்குபற்றிய கடற்படை வீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.