சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால், 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, காலி தேவா மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின மற்றும் காவந்திஸ்ஸ நிறுவனங்களின் கடற்டையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் மூலம், காலி தெவட்ட மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரையில் சிதறி கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் அகற்றப்பட்டது.

மேலும், தென் கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.