சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் (Marine Environment Protection Authority - MEPA) இணைந்து, 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, சின்ன முகத்துவாரம் மற்றும் ஆருகம்பே கடற்கரையில் 2024 செப்டம்பர் மாதம் 10 மற்றும் 11, தினங்களில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்கவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக மற்றும் தீகாயு நிறுவனங்களின் கடற்டையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் மூலம், சின்ன முகத்துவாரம் மற்றும் ஆருகம்பே கடற்கரையில் சிதறி கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் அகற்றப்பட்டது.

மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.