கிரிந்தஓய கடற்படை இணைப்பில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ், கிரிந்திஓயா கடற்படை வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவானது கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் சமூக நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, குறித்த திட்டத்தின் கீழ் கிரிந்திஓயா கடற்படை இணைப்பு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 1025வது நீர் சுத்திகரிப்பு நிலையம் தென் கடற்படை கட்டளை தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவது கிரிந்திஓயா கடற்படை வளாகத்தில் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்வதுடன், இந்த நிகழ்வில் தென் கடற்படை கட்டளைத் திணைக்களத் தலைவர்கள், இலங்கை காவந்திஸ்ஸ நிறுவனத்தின் கட்டளைத் தளபதி கொமடோர் அனில் வசந்த உட்பட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், மாலுமிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.