கடற்படை தாதியர் கல்லூரியில் தாதியர் பயிற்சியை முடித்த தாதியர் மாணவர்களுக்கு டிப்லோமா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர கடற்படை தாதியர் கல்லூரியின் 2021 மற்றும் 2022 ஆட்சேர்ப்புக்கான கடற்படை மற்றும் விமானப்படை தாதியர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா 2024 செப்டம்பர் 04 ஆம் திகதி ஜெனரல் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன்படி, கடற்படை தாதியர் கல்லூரியின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான தாதியர் மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜி.யு.டி.குமார (ஓய்வு) மற்றும் முன்னாள் இராணுவ பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் மேஜர் ஜெனரல் பீ.ஏ.சி பிரனாந்து ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், இந் நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் சுகாதார சேவைகள் ரியர் அட்மிரல் ஜனக மாரம்பகே, பயிற்சி பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடங்களின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.