கடற்படை அச்சிடும் பிரிவில் டிஜிட்டல் அச்சிடும் வசதிகள் நிறுவப்பட்டது

வெலிசர கடற்படை வளாகத்தில், கடற்படை அச்சிடும் பிரிவினால் வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக நிறுவப்பட்ட டிஜிட்டல் அச்சிடும் இயந்திரத்தின் அச்சிடும் நடவடிக்கைகள் தொடங்கும் நிகழ்வு 2024 செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் பல்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு வெளி சந்தையில் இருந்து அச்சிடுதல் தேவைகளைப் பெறுவதற்கு செலவழித்த பெரும் செலவு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தவும், குறித்த தேவைகளை உயர் தரத்துடன் பூர்த்தி செய்யும் நோக்குடன், கடற்படை அச்சிடும் பிரிவு 2015 ஆம் ஆண்டில் வெலிசர கடற்படை வளாகத்தில் நிறுவப்பட்டது.

இதன்படி, கடற்படை அச்சிடும் பிரிவினால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், டிஜிட்டல் அச்சிடும் வசதியுடன் கூடிய அச்சிடும் இயந்திரமொன்று நிறுவப்பட்டு, 2024 செப்டெம்பர் 05 ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் பயிற்சியின் தலைமையில் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

கடற்படை அச்சிடும் பிரிவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அச்சிடும் வசதியின் மூலம் கடற்படையின் பல்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன அச்சிடும் வசதிகள் மட்டுமின்றி கடற்படை வீரர்களின் பல்வேறு நவீன அச்சிடும் தேவைகளும் எளிதாக பூர்த்தி செய்யப்படும்.

மேலும், கடற்படைத் தலைமையகம் மற்றும் வெலிசர கடற்படை வளாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை அச்சிடும் பிரிவின் கட்டளை அதிகாரி கெப்டன் சமிந்த விஜேசிறி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.