கடற்படையால் தயாரிக்கப்பட்ட வேவ் ரைடர் வகையின் இரண்டு கரையோர ரோந்து படகுகள் கல்பிட்டியில் செயற்பாடு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது

வெலிசர கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட வேவ் ரைடர் வகையின் கரையோர ரோந்து படகுகளின் (Accommodation type Wave Rider IPCs - P 265 and P 266) செயற்பாடு நடவடிக்கைகள் தொடங்கும் நிகழ்வு வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் தலைமையில் 2024 செப்டெம்பர் 02 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தில் இடம்பெற்றது.

இதன்படி, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட அதிக திறன் கொண்ட, வேகமான மற்றும் கடலில் நீண்ட காலம் பணியாற்றக்கூடிய இந்த குளிரூட்டப்பட்ட வேவ் ரைடர் வகையின் கடலோர பாதுகாப்பு படகுகள் மூலம் வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல், சரக்குகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மிகவும் திறமையாக எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.