கடற்படையினரின் பங்களிப்புடன் ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நிறுவப்பட்ட சூரிய சக்தி அமைப்பு 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு.சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்காக, GAIA Greenenergy Holdings (Private) Limited உடன் இணைந்து நடத்தப்பட்ட பயிற்சித் திட்டத்துடன் இணைந்து, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நூற்று ஐம்பது கிலோவாட் (150 KW) சூரிய சக்தி அமைப்பொன்று நிறுவப்பட்டதுடன் குறித்த சூரிய சக்தி அமைப்பை திறந்து வைக்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி திரு. சாகல ரத்நாயக்க அவர்களின் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சூரிய சக்தி அமைப்பு நிறுவுவதில் சிறப்பு பயிற்சி பெற்ற 12 கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.