24 நேரடி நுழைவு அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றது

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படைக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 24 அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2024 ஆகஸ்ட் 30) கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் அதிகாரி கொமடோர் ரொஹான் ஜோசப் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.

அதன்படி, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 1/2023 நேரடி ஆட்சேர்ப்புக்கு உட்பட்ட இருபத்தி நான்கு (24) அதிகாரிகளின் வெளியேறல் அணிவகுப்பு நிகழ்வில், பயிற்சிக் காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு பிரதம அதிதியால் வெற்றிக்கிண்ணங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி, 1/2023 நேரடி ஆட்சேர்ப்புக்கு உட்பட்ட அதிகாரிகளின் சிறந்த அதிகாரிக்கான விருதை மற்றும் ஒட்டுமொத்த பாடங்களில் அதிக எண்ணிக்கை பெற்ற அதிகாரிக்கான விருதை என்.வி.எஸ்.ஏ.என் பண்டார பெற்றுள்ளார். மேலும், சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரருக்கான விருதை செயல் துணை லெப்டினன்ட் ஏ.டி.எஸ்.ஏ அம்பேபிட்டியகே பெற்றுள்ளதுடன் செயல் துணை லெப்டினன்ட் ஆர்.எம்.டி செவ்வந்தி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.

அங்கு உரையாற்றிய கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி முதலில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தாய்நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக தமது பிள்ளைகளை கடற்படையில் இணைந்து கொள்ள ஊக்குவித்த அவர்களின் பெற்றோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும், கடற்படை இசைக்குழு மற்றும் கலாச்சார நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளுடன் குறித்த நிகழ்வு வண்ணமயமானது.

கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் வெளியேறி சென்ற அதிகாரிகளின் உறவினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.