சீன போர்க்கப்பல்கள் தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டன

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army Navy) போர் கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவுடனான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2024ஆகஸ்ட் 29,) இலங்கை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளை பின்பற்றி புறப்படும் கப்பல்களுக்கு பிரியாவிடை வழங்கினர்.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் (PASSEX) கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதை நிமித்தமான பயிற்சிகளை நடத்திய பிறகு பயிற்சி முடிவடைந்தது.

“HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேலும், இந்த மூன்று கப்பல்கள் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்காக கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும் கடற்படையினர்களும் கழந்துகொண்டனர். மேலும், தீவில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடவும் அவர்கள் கழந்துகொண்டனர். கப்பல்களின் செயல்பாடுகள் குறித்தும் அந்த கப்பல்களில் இலங்கை கடற்படை வீரர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள், கடல் பிராந்தியத்தின் பொதுவான கடல் பகுதி சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியை கொண்டு வரும்.