இந்திய கடற்படைக் கப்பல் ‘INS Mumbai’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹுவுடன் இணைந்து நடத்திய கூட்டுப் பயிற்சியின் பின் இன்று (2024 ஆகஸ்ட் 29,) இலங்கை விட்டு வெளியேறியது. புறப்பட்ட கப்பலுக்கு கடற்படை மரபுகளை பின்பற்றி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதை நிமித்தமான பயிற்சிகளை நடத்திய பிறகு இந்த பயிற்சி முடிவடைந்தது.
மேலும், INS Mumbai’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் கடற்படையினர் இரு கடற்படைகளுக்கும் இடையே நட்புறவை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதற்கிடையில், இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலின் ஆயுதங்கள் குறித்து கவனம் செலுத்தும் விளக்கக்காட்சிகளில் பங்கேற்றனர்.
மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள், கடல் பிராந்தியத்தின் பொதுவான கடல் பகுதி சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியை கொண்டு வரும்.