நிகழ்வு-செய்தி
ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீர்ரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது
யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் எச்.ஜே.புஷ்பகுமாரவுக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு இன்று (2024 ஆகஸ்ட் 26) குறித்த சிரேஷ்ட மாலுமியின் இல்லத்தில் பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் பிரியால் விதானகே தலைமையில் நடைபெற்றது.
26 Aug 2024
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மூன்று சீன போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army Navy) போர்க்கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வருகை தந்த கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.
26 Aug 2024
இந்திய கடற்படையின் ‘INS Mumbai’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Mumbai’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
26 Aug 2024
ரியர் அட்மிரல் அனில் போவத்த கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்
33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் அனில் போவத்த தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 26) ஓய்வு பெற்றார்.
26 Aug 2024


