உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மூன்று சீன போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army Navy) போர்க்கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வருகை தந்த கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.
அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer வகையின் போர்க்கப்பலான “HE FEI” 144.50 மீற்றர் நீளமும், மொத்தம் 267 கடற்படையினர்களும் கொண்டுள்ளதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Chen Junfeng பணியாற்றுகிறார். Landing Platform Dock வகையின் போர்க்கப்பலான “WUZHISHAN” 210 மீட்டர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 872 கடற்படையினர்களை கொண்டுள்ளது, கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Fei Zhang பணியாற்றுகிறார். Landing Platform Dock வகையின் போர்க்கப்பலான “QILIANSHAN 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் மொத்தம் 334 கடற்படையினர்களை கொண்டுள்ளது, கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் Xiong Binghon பணியாற்றுகிறார்.
இந்த மூன்று கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (26 ஆகஸ்ட் 2024) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதுடன் இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் கடற்படையினர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய மூன்று போர்க்கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இந்த கப்பல்களின் முழு கடற்படையும் தீவின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, மற்றும் இலங்கை கடற்படையினருக்கு கப்பல்களின் செயல்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், மேற்கு கடற்படை கட்டளை கடற்கரையில் இலங்கை கடற்படை கப்பலுடன் நடத்தப்படுகின்ற பயிற்சிக்கு (PASSEX) பிறகு, “HE FEI”, “WUZHISHAN” සහ “QILIANSHAN” ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் 2024 ஆகஸ்ட் 29 ஆம் திகதி இலங்கை விட்டுப் புறப்படும்.