வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை திருமண வீடமைப்பு கட்டிடம் கடற்படை தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், வெலிசர கடற்படை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை திருமண வீடுகள் கட்டிடம் இன்று (2024 ஆகஸ்ட் 23) கடற்படை வீரர்களின் பயன்பாட்டிற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கு கடற்படை கட்டளையின் சிவில் பொறியியலாளர் துறையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் இந்த கடற்படை திருமண வீடமைப்பு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 36 திருமண வீடுகளைக் கொண்ட இக்கட்டடத்தில், முதுநிலை மற்றும் இளைய மாலுமிகளின் பயன்பாட்டிற்காக கடற்படைத் தளபதி தலைமையில் இன்று (2024 ஆகஸ்ட் 23) பூர்த்தி செய்யப்பட்ட மூன்று மாடிகளில் 12 முழுமையான வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

கடற்படை வீரர்களின் திருமண வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திருமண வீடமைப்புத் திட்டம் கொவிட்-19 காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடற்படையின் நலன்புரி நிதியத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி தெரிவித்தார். தொற்றுநோய் நிலைமை, மற்றும் பொருளாதார சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த திருமண வீடுகள் கட்டிடம் கட்டுவதற்கு நிதியை வழங்கிய அரசாங்கத்திற்கும் நிதியமைச்சகத்திற்கும் நன்றி தெரிவித்தார். வெலிசர கடற்படை வளாகத்தின் திருமண வீடமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்தி கடற்படையினரின் திருமண வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாக கடற்படை தளபதி தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, மாலுமிகள் வீடுகளை எந்த நிலையில் பெற்றுக் கொண்டார்ளோ அதே நிலையில் அவற்றை மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன் மேற்கு கடற்படை கட்டளையில் உள்ள பயன்படுத்த முடியாத திருமண வீடுகள் புனரமைக்கப்பட்டு குறுகிய காலத்தில் சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படை வீரர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். கடற்படை சேவா வனிதா பிரிவின் ஏற்பாடுகள் மூலம் கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள திருமண இல்லங்கள் புனரமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், தெற்கு கடற்படை கட்டளையில் கடற்படையினரின் திருமண வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார். கடற்படைத் தலைமையகத்தை அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையக வளாகத்திற்கு மாற்றும் போது ஏற்படும் உத்தியோகத்தர் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடற்படையினர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக கடற்படையில் இணையும் போது வீடு கட்டுவதற்கான முதலீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையை விட்டு வெளியேறும் போது தனது பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

மேலும், இந் நிகழ்வுக்காக, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா ஹேவா அவர்கள், ஓய்வுபெற்ற கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் பிரியால் விதானகே, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண, பணிப்பாளர் நாயகம் தளவாடங்கள் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் ருவன் களுபோவில பணிப்பாளர் நாயகம் மின்சாரம் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர் ரியர் அட்மிரல் பிரசாந்த அந்தோனி, பதில் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் கொமடோர் ரவி குணசிங்க, உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய குழு பங்குபற்றியதுடன், இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதில் பங்களித்த அனைத்து கடற்படை வீரர்களையும் கடற்படைத் தளபதி மதிப்பீடு செய்தார்.