கடற்படையினரின் பங்களிப்புடன் மஹமோதர மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று இன்று (2024 ஆகஸ்ட் 24) காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகர எல்லையுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின மற்றும் காவந்திஸ்ஸ நிறுவனங்களின் கடற்டையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் மூலம், காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகர எல்லை வரையிலான கடற்கரைகளில் சிதறி கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் அகற்றப்பட்டது.