அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Stockdale என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale' என்ற கப்பல் இன்று (2024 ஆகஸ்ட் 22,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள Arleigh Burke - class destroyer வகையின் ‘USS Stockdale’ கப்பல் 155.3 மீட்டர் நீளம் கொண்டுள்ளதுடன் மொத்தம் முந்நூற்று முப்பத்திரண்டு (332) கடற்படையினர்களைக் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Lauren Johnson பணியாற்றுகிறார்.

மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Stockdale' என்ற கப்பல் 2024 ஆகஸ்ட் 23 ஆம் திகதி இலங்கை விட்டு புறப்பட உள்ளது.