கடற்படை கப்பல்துறையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது
கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ், கடற்படை கப்பல்துறையில், கடற்படை ஆயுதத் திணைக்கள ஜெட்டி வளாகத்தில் (CNAD Pier) நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு மையம் இன்று (2024 ஆகஸ்ட் 20,) கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் சமூக நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ், கடற்படை கப்பல்துறையில், கடற்படை ஆயுதத் திணைக்கள ஜெட்டி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 1024ஆவது நீர் சுத்திகரிப்பு நிலையம் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதன் மூலம் கடற்படை ஆயுதத் திணைக்கள ஜெட்டி வளாகத்தில் உள்ள கடற்படை படகுகளின் கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை கப்பல்துறையில் கடற்படை வீரர்களின் சுத்தமான குடிநீர் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.