இந்தோனேசிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இந்தோனேசிய குடியரசு தூதரகத்துடன் இணைக்கப்பட்டுள்ள, இலங்கையின் இந்தோனேசிய குடியரசு பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கொமடோர் Ardiansyah Muqsit இன்று (2024 ஆகஸ்ட் 20) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

கடற்படை தளபதி மற்றும் இந்தோனேசியக் குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.