கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எசல மஹா பெரஹெரவின் நீர் வெட்டு விழாவிற்கு கடற்படையின் பங்களிப்பு
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாங்கு பிரதான தேவாலயங்களில் எசல மகா பெரஹரவின் முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (2024 ஆகஸ்ட் 20) பேராதனை, கட்டம்பே பகுதியில் நடைபெற்ற நீர் வெட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படை பங்களித்தது.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் சில்ப நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், இந்த நீர் வெட்டு விழாவின் வெற்றிகரமான கொண்டாட்டத்திற்காக இலங்கை கடற்படை சுழியோடி பிரிவு, மரையின் பிரிவு மற்றும் உடனடி பதில் மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் குழுக்களால் தேவையான சிறிய படகுகள் மற்றும் உயிர்காக்கும் சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும்,பெரஹர நடைபெற்ற காலத்தின் போது கண்டி குளம் வளாகத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கடற்படையினரால் உயிர்காக்கும் சேவைகளும் நடத்தப்பட்டன.