கொமடோர் தனேஷ் பத்பேரிய கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கொமடோர் தனேஷ் பத்பேரிய இன்று (2024 ஆகஸ்ட் 20,) கடற்படை தலைமையகத்தில் உள்ள நிர்வாக பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

கொமடோர் தனேஷ் பத்பேரிய பதில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்க முன் கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றினார், மேலும் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் அனில் போவத்த, பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் தனேஷ் பத்பேரியவிடம் அந்த பதவியின் கடமைகளை ஒப்படைத்தார்.