ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
37 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 16) ஓய்வு பெற்றார்.
இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.
1987 ஆம் ஆண்டில், 17 வது கெடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, தனது 37 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் சபுகஸ்கந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பயிற்சி குழு தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் (கடற்படை) விளையாட்டு, கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கட்டளை அதிகாரி மற்றும் வணிக கப்பல்கள் பயிற்சி பாடசாலையின் அதிபர், ஏவுகளை கட்டளையின் கொமடோர் கடல் பயிற்சி, கடற்படை கட்டளை அதிகாரி வெலிசர மற்றும் கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர், கொழும்பு தேசிய பாதுகாப்பு அகாடமியின் சிரேஷ்ட ஆலோசகர் (கடற்படை), கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் இயக்குநர், தென்கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி, வட மத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி, பணிப்பாளர் பொது நடவடிக்கைகள் மற்றும் கடற்படைத் துணைத் தலைமை அதிகாரி மற்றும் கடற்படைத் தலைமை அதிகாரி ஆகிய முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற தலைமை அதிகாரியுமாவார்.