அவுஸ்திரேலிய இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டு பணிப் படையணியின் தளபதி இலங்கை கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
அரச ஆஸ்திரேலிய கடற்படையின், இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டு பணிக்குழுவின் தளபதி (Commander Joint Agency Task Force Operation Sovereign Borders) Rear Admiral Brett Sonter RAN மற்றும் அந்தப் படையின் பிரதிநிதிகள் குழு (2024 ஆகஸ்ட் 14) இன்று கடற்படை தலைமையகத்தில், உத்தியோகபூர்வ சந்திப்புக்காக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.
இதன்படி, கடற்படைத் தளபதி மூலம், இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டுப் பணிப் படையின் தளபதி ரியர் அட்மிரல் Rear Admiral Brett Sonter மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப் படையின் பிரதிநிதிகளை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்ற பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் உட்பட கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்புக்கு இணையாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய எல்லைப் படையினால் வழங்கப்படவுள்ள மூன்று விசேட வாகனங்களில் (All- Tertian Vehicles AVTs) இரண்டு (02) வண்டிகள் கொழும்பு துறைமுக வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இந்த விசேட வாகனங்களை வழங்கும் நிகழ்விற்காக, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens, இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டுப் பணிப் படையின் தளபதி Rear Admiral Brett Sonter RAN, இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் பூஜித விதான, ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.